உடை சுதந்திரம் குறித்து பென்னியவாதிகள் பல்வேறு காலங்களாக கூறி வருகின்றனர். பெண்கள் ஆடை அணிவது என்பது அது அவர்களின் உரிமை, அதில் தலையிட எவருக்கும் உரிமை கிடையாது என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால், செல்லும் இடங்களுக்கு தகுந்தவாறு, கன்னியமான உடையை, ஆணும் பெண்ணும் அணிந்து செல்ல வேண்டியது, சமூகத்தின் கடமையாக பார்க்கப்படுகிறது. இந்த தவறை, சில பெண்களும், ஆண்களும் அவ்வப்போது செய்துக் கொண்டு தான் உள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், நீச்சல் உடையை காட்டிலும் மிகவும் குறைவான ஆடையை அணிந்துக் கொண்டு, இளம்பெண் ஒருவா் பயணம் செய்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மெட்ரோ அதிகாரிகள் இதுகுறித்து பேசும்போது, “தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் மட்டும் செய்யும் தவறை எப்படி தடுப்பது.. இதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில்களில் ஆடை கட்டுப்பாடு என்பது கிடையாது.. அந்தந்த தனிப்பட்ட நபர்கள் தான், பொது இடங்களில் கன்னியமாக நடந்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.