ஆவடி அருகே டைபாய்டு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பலி

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இவரது 10 வயது மகன் தன்வந்த் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த 3 நாட்களுக்கும் மேல் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் திருநின்றவூரிலுள்ள சுகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் திருநின்றவூரில் உள்ள அதே தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை சென்ற நிலையில் சிறுவன் அங்கு மயக்கம் அடைந்த தாக கூறப்படுகிறது.

உடனே அங்கிருந்த அந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்தச் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். டைபாய்டு காய்ச்சலுக்காக பத்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News