முதியவரை போல வேடமிட்டு கனடா செல்ல முயன்ற 24 வயது இளைஞர்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. சிஐஎஸ்எப் அதிகாரிகள் அவரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது 24 வயதான குரு சேவக் சிங் என்ற இளைஞர், தன்னை ஒரு மூத்த குடிமகன் போல காட்டுவதற்காக தன்னுடைய முடி மற்றும் தாடி மீசை அனைத்திற்கும் வெள்ளை நிறத்தில் டை அடித்துள்ளார்.

இப்படி தன்னுடைய தோற்றத்தை 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு மூத்த குடிமகன் போல மாற்றிக் கொண்டு டெல்லி விமான நிலையத்திலிருந்து கனடாவிற்கு விமானத்தில் அவர் புறப்பட இருந்த நிலையில் அதிகாரிகள் அவரை பிடித்தனர்.

அவருடைய உண்மையான பாஸ்போர்ட்டையும் அவர் உடன் வைத்திருந்தது பின்னர் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அந்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News