அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மாவிலங்கு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய 3 வயது மகன் ரோகித் சர்மா, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
திடீரென அந்த சிறுவன் காணாமல் போனதால், ஊர் முழுவதும் உறவினர்கள் தேடியுள்ளனர். கடைசியாக அந்த கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் உறவினர்கள் பார்த்துள்ளனர்.
அங்கு கிடந்த சிறுவனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.