தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சிவா, லட்சுமி கலா தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 40 நாட்களே ஆன நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தூங்கிக்கொண்டிருந்த பிஞ்சு குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது.
இதையடுத்து அருகே இருந்த மருத்துவமனையில் மருந்து பெற்று காயத்திற்கு தடவி வந்துள்ளனர். இந்நிலையில் எலி மீண்டும் குழந்தையின் மூக்கின் மேல் இருந்த காயத்தில் கடித்துள்ளது.
வலியால் குழந்தை அலறிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது.
பிறந்து 40 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை, எலி கடித்து மரணம் அடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.