சென்னை எழும்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் மீது ஆலமரம் விழுந்து சேதம்

சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலுக்கு சொந்தமான 70 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று நேற்று சுமார் 12 45 மணிக்கு மாண்டோஸ் புயல் தாக்கத்தால் முறிந்து விழுந்தது.

இதில் அசோகா ஹோட்டல் அருகில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் பெட்ரோல் பங்க் சேதமடைந்தது. அந்த நேரத்தில் அங்கு ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை,

24 மணி நேரமும் செயல்படும் இந்த பெட்ரோல் பங்க் நேற்று புயல் எச்சரிக்கையின் காரணமாக 10 மணிக்கு மூடப்பட்டதால் அங்கு எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது.