குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி..அச்சத்தில் மக்கள்

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் பட்டாலியன் தளவாய் குடியிருப்பு பகுதிக்குள் கரடி புகுந்து உள்ளதால் பொதுமக்கள், காவலர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் மான், கரடி, சிறுத்தை, கட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் இங்கு வந்து செல்கின்றன. இதனால் மக்கள் அடிக்கடி அச்சமுடன் இருக்கும் நிலையும் உள்ளது.

இந்த நிலையில் அங்கு அமைந்துள்ள மணிமுத்தாறு பட்டாலியன் தளவாய் குடியிருப்பு பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்துள்ளது. கரடி அங்கு உள்ள மரத்தில் ஏறி அமர்ந்துள்ளது.

பொதுமக்கள நடமாடும் பகுதி என்பதால் உடனடியாக அம்பாசமுத்திரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மரத்தில் ஏறி அட்டகாசம் செய்து வரும் கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News