ஒரு பெரிய ‘கை’ சுவர் போன்று மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்!

ராய்ப்பூர்: ‘சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சியை ஒரு பெரிய ‘கை’ (காங்கிரசின் சின்னம்) தடுத்து நிறுத்துகிறது’ என பிரதமர் மோடி காங்கிரசை விமர்சித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் சென்ற பிரதமர் மோடி, ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (6 வழிச்சாலை) திறப்பு மற்றும் ரூ.7000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி பேசியதாவது: சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கு முன்னால் ஒரு பெரிய ‘கை’ சுவர் போன்று தடுத்து நிறுத்துகிறது. அது மக்களின் உரிமைகளை பறிக்கும் காங்கிரசின் ‘கை’. அது மாநிலத்தை கொள்ளையடித்து நாசமாக்க முடிவு செய்துள்ளது. ஆனால், சத்தீஸ்கரின் வளர்ச்சியில் பா.ஜ.க முக்கிய பங்காற்றியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES

Recent News