கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து பாஜக நகர்மன்ற உறுப்பினர் மீசை எடுத்து போராட்டம் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு பகுதியில் தொடங்கப்பட்ட பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்கமால் கிடப்பில் போடப்பட்டுள்ளது என பாஜக நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் குற்றம்ச்சாட்டினார்.
20வது வார்டுபகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பல புகார்களை தெரிவித்தார். இதையடுத்து பாஜகவை சேர்ந்த 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் நகராட்சி அலுவலகம் முன்பு மீசையை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாஜக நகர்மன்ற உறுப்பினர் நகராட்சியை கண்டித்து மீசையை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.