பாகிஸ்தானில் மீண்டும் குண்டு வெடிப்பு..! பலர் படுகாயம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குவெட்டாவின் போலீஸ் தலைமையகம் அருகே நடந்துள்ளது. போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 90 பேர் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பொறுப்பேற்ற தெஹ்ரிக் – இ – தலிபான் தீவிரவாத அமைப்பு . இதுபோன்ற தாக்குதல்கள் இனி தொடர்ந்து கொண்டே இருக்கும் என பேசியது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News