மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பாக நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது முா்ஷிதாபாத், நாடியா, கூச் பெஹார், தெற்கு 24 பா்கானாஸ், கிழக்கு மேதினிபூா் ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டைமண்ட் துறைமுகப் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.