Connect with us

Raj News Tamil

மாணவிகளின் விடுதிக்கு அருகே நிர்வாணமாக போஸ் கொடுத்த வாலிவர்!

தமிழகம்

மாணவிகளின் விடுதிக்கு அருகே நிர்வாணமாக போஸ் கொடுத்த வாலிவர்!

பல் மருத்துவ கல்லூரி மாணவிகள் தங்கியுள்ள விடுதி அருகே நிர்வாணமாக நின்று போஸ் கொடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பாரிமுனை பகுதியில் பல் மருத்துவ கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது.‌ இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி பல் மருத்துவம் படித்து
வருகின்றனர்.

இந்த விடுதியில் எண்ணூரை சேர்ந்த மாலினி (43) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று (மே.30) மாலை அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் மாணவிகள் தங்கியுள்ள விடுதி எதிரே உள்ள பழைய கட்டிடத்தின் மீது ஏறி‌ தனது ஆடைகளை அகற்றி நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவிகள் உடனே மேலாளருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த மாலினி உடனே இது குறித்து பூக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் நிர்வாணமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து உடைகள் அணிவித்து பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.‌

முதற்கட்ட விசாரணையில் அவர் கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (42) என்பதும் திருமணம் ஆகாத இவர் செங்குன்றத்தில் உள்ள எண்ணெய் கம்பெனியில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

மேலும் மது போதையில் கல்லூரி விடுதிக்குள் நுழைந்த ரவிகுமார் அங்கிருந்த பெண்களை‌ பார்த்த உடன் ஆடைகளை கழட்டி விட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்தது தெரிய வந்தது.‌

இதனை தொடர்ந்து போலீஸார் ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top