சென்னை திருவொற்றியூரில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு முட்டிய தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்த மதுமதி (33) திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
சோம சுந்தரம் நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளை விளையாட அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து மதியம் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க சென்ற போது கிராம தெருவில் வேகமாக வந்த எருமை மாடு ஒன்று மதுமதியை முட்டி தூக்கி வீசியது. முட்டியதில் மதுமதியின் ஆடை மாட்டின் கொம்பில் சிக்கி தரதரவென்று தெருவில் இழுத்து சென்றது.
இதைப் பார்த்த அந்த பகுதியில் துணிகளை இஸ்திரி போடும் கடை வைத்திருக்கும் சந்திரசேகர் என்பவர் மது மதியை காப்பாற்ற சென்றபோது அவரையும் மாடு முட்டி தூக்கி வீசியது அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த மதுமதி மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போதும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு 20 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே சென்னையில் மாடு முட்டிய சம்பவங்கள் நடைபெற்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது திருவொற்றியூரில் 33 வயதுடைய மதுமதி என்ற பெண்ணை மாடு முட்டி தரதரவென்று இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உடனடியாக மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.