மதுரை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் தொகுதியில் 2ஆவது சுயேச்சை வேட்பாளராக மதுரை செல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலரான சங்கரபாண்டியன் என்பவர் நூதன முறையில் தூக்கு கயிற்றில் டம்மி பணத்தை கட்டி தொங்கவிட்டவாறு வேட்புமனு தாக்கல் செய்த வந்தார்.
ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர்கள் பணம் பெற்று வாக்களிப்பது என்பது தூக்கு மாட்டிக்கொள்வது போன்றது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையில் விழிப்புணர்வு வாசக பதாகையோடு வந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டி கையில் தூக்குக் கயிற்றைச் சுமந்தபடி வந்தார்.
சங்கரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தூக்குக் கயிற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்தேன் என்றார்.