பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது கார் மோதி விபத்து!

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57) இன்று (நவ.8) காலை 9 மணியளவில் தேனாம்பேட்டை எஸ்ஐடி பகுதியில் யு டர்ன் எடுப்பதற்காக நான்கு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி திருப்பும் பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருக்கக்கூடிய பேரிகார்ட் மீது மோதியுள்ளது.

அப்பொழுது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அழகு குமார் (28) மீது மோதியதில் அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு முகம் மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த நபர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் காவலரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு சக்கர வாகன ஓட்டுநர் கஜேந்திர பாபுவுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News