கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரை ஓட்டி வந்த நபர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.