கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கார் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் சாலையில் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது.
சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று டிரைவர் இல்லாமலேயே பின்னோக்கி நகர்ந்து வாகன நெரிசல் மிகுந்த சாலையில் ஓடியது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் கூச்சலிட்டு அலறினார்கள்.
இதைப் பார்த்த அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கார் ஓட்டுநர் இல்லாமல் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் செல்வதைப் பார்த்து உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தி காருக்குள் ஏறி பிரேக் போட்டு காரை நிறுத்தினார். இதனால் காருக்குள் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
வாகன நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலையில் டிரைவர் இல்லாமல் ஓடிய காரை இருசக்கர வாகனத்தில் சென்றவர் உடனடியாக செயல்பட்டு மீட்டது பலரையும் பாராட்டை பெற்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.