ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற அதிகாரிகள் என 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் உண்டி தொகுதி எம்.எல்.ஏ. கே.ரகுராம கிருஷ்ண ராஜு கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகாரில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருந்த நிலையில், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு, தான் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது துன்புறுத்தப்பட்டதாகவும் முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.