Connect with us

Raj News Tamil

இஸ்லாமிய தொழுகையை ஒலிபரப்ப தடை கோரிய வழக்கு : நீதிமன்றம் கேட்ட சரியான கேள்வி..!!

இந்தியா

இஸ்லாமிய தொழுகையை ஒலிபரப்ப தடை கோரிய வழக்கு : நீதிமன்றம் கேட்ட சரியான கேள்வி..!!

குஜராத் மாநிலத்தில் மசூதிகளில் தொழுகைக்காக இஸ்லாமியர்களை அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பை தடை செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

பஜ்ரங்கதள அமைப்பை சேர்ந்த சக்தி சிங் ஜாலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் மசூதிகளில் தொழுகை அழைப்புக்கு ஆஸான் ஒலிக்கப்படுகிறது. இதனால் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. அதோடு இந்த ஒலிபெருக்கியின் சத்தத்தால் குழந்தைகளின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. அதோடு மக்களுக்கு இந்த சத்தம் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மசூதிகளில் தொழுகைக்கான ஒலிபெருக்கி அழைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். ஒருநாளில் அதிகபட்சமாக 10 நிமிடங்கள் மட்டுமே ஆஸான் ஒலிக்கப்படுகிறது. இது மனிதர்களை பாதிக்கும் அளவில் ஒலி மாசுவை உருவாக்குகிறதா? கோவிலில் மேளதாளங்கள், இசையுடன் கூடிய பஜனை பாடல்கள் அதிகாலை 3 மணிக்கு தொடங்குகிறது. வெவ்வேறு நாட்களிலும் இது நடந்து வருகிறது. இதுமட்டும் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதா? என சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.

இறுதியாக மசூதிகளில் தொழுகைக்கான ஒலிபெருக்கியை தடை செய்யக்கோரிய பொதுநல மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.

More in இந்தியா

To Top