தனுஷ் நடிக்காத கேரக்டர் : எச்.வினோத் கொடுத்த மாஸ் அப்டேட்..!

அஜித் குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துணிவு. பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின், இறுதிகட்ட போஸ்ட் புரெடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் அடுத்ததாக, உருவாக இருக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

இப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வினோத், ஒரு உண்மை கதை என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் சந்தித்த நிகழ்வு என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் தனுஷ் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்காத நிலையில், முதல் முறை போலிஸ் கேரக்டரில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.