கொசு மருந்து குடித்து குழந்தை பலி..!

கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ரம்ஷீத், அன்ஷிபா தம்பதிகளுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஜாஸா உட்பட 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி குழந்தை ஜாஸா மயங்கிய நிலையில் கிடந்ததோடு அவருக்கு அருகில், கொசு மருந்து பாட்டில் ஒன்றும் காலியாக இருந்துள்ளது.

இதனால் உறவினர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குழந்தை ஜாஸா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொசுமருந்து குடித்து ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News