சூர்யா பட நடிகையிடம் அத்துமீறிய கல்லூரி மாணவன்..!

8-தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அபர்ணா பால முரளி. பின்னர் சூரரைப் போற்று, நித்தம் ஒரு வானம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பின்னணி பாடகியாகவும் அறியப்படும் இவர், தற்போது தங்கம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவில் உள்ள சட்ட கல்லூரி விழாவில் கலந்து கொண்ட இந்த படக்குழுவினர், அங்கு தங்கம் படத்தை புரோமோஷனும் செய்தனர்.

அப்போது நடிகை அபர்ணா பால முரளியை வரவேற்கும் விதமாக, கல்லூரி மாணவர் ஒருவர் அவரது தோளில் அத்துமீறி கைபோடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த அபர்னா ரசிகர்கள் கடும் கோபத்தில் அந்த கல்லூரியையும், மாணவரையும் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News