குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஹேமுபாய் மக்வானா (38) மற்றும் ஹன்சா பென்(35). ஹேமுபாய் மற்றும் ஹன்சாபென் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை கொண்ட இவர்கள் கடந்த ஒரு வருடமாக தங்கள் குடிசையில் மாந்திரீக பூஜைகளை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அன்று ஹோம குண்டத்தில் நெருப்பு வளர்த்து பூஜை செய்த இவர்கள் மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.
தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுக்கும் விதமாக எந்திரம் ஒன்றை உருவாக்கி அதில் தலையை கொடுத்து நரபலியாகியுள்ளனர். தலை உருண்டு சென்று குண்டத்தில் விழும் விதமாக இவர்கள் அதை அமைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. தம்பதி தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.