வங்கக் கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்!

தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று (நவ.26) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை (நவ.27) புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது தமிழக கடற்கரையை நோக்கி மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகின்றது.

நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

தொடர்ந்து, வடக்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்கி பின்னர், அடுத்த 2 நாள்களில் புயலாக தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News