ஓடும் பேருந்தில் ஆபத்தான பயணம்.. மாணவர்கள் அடிக்கும் புட்போர்ட் வீடியோ வைரல்!

மன்னார்குடியில் அரசு பேருந்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மன்னார்குடி அருகே உள்ள நாணலூர் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் மன்னார்குடியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயில்வதற்காக நாள்தோறும் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் காலை மற்றும் மாலை

வேளைகளில் இந்த பகுதியாக வரும் பேருந்து பேருந்துகளில் அளவிற்கு அதிகமான மாணவர்கள் சென்று வருகின்றனர். இதனால் அமர்வதற்கு இருக்கைகள் இன்றி பேருந்தில் படிக்கட்டுகளில் நின்ற படி மாணவர்கள் பயணம் செல்கின்றனர்.

அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பே போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனித்து காலை மற்றும் மாலை வேலைகளில் மன்னார்குடியில் இருந்து கலப்பால் வரை கூடுதலான பேருந்து இயக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

RELATED ARTICLES

Recent News