ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் தான் பெருமளவில் நடித்து வருகிறார். இவருக்கென்று, தனி ரசிகர் பட்டாளமே, தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.
இந்நிலையில், அச்சு அசல் இவரைப் போலவே, இன்னொரு இளம் பெண், தெலுங்கு சினிமாவில், கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அதாவது, ஈகில் என்ற பெயரில், தெலுங்கு திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் என்ற பெண், நடிக்க உள்ளார்.
இந்த நடிகை பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷ் போலவே உள்ளார் என்று, அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒருசிலர், இந்த பெண், ஒரு ஜாடையில், ராஷ்மிகா போல இருப்பதாகவும், கூறி வருகின்றனர்.