கூலி வேலைக்கு செல்லும் திமுக கவுன்சிலர்” – இவருக்கே இந்த நிலையா? முதல்வர் என்ன செய்கிறார்?

அரசியல்வாதிகள் என்றால், பல ஊழல்களை செய்து, பகட்டான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள் என்று தான், ஒரு பொது பிம்பம் உள்ளது. ஆனால், அந்த பொதுக் கருத்தை பொய்யாக்கும் வகையில், திமுக கவுன்சிலரின் வாழ்க்கை தற்போது மாறியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 2-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராணி.

பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில், 450 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பதிவு செய்தார். ஆனால், தான் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை அடமானம் வைத்து தான், தேர்தலுக்காக அவர் செலவு செய்தார். அதற்கான வட்டி தொகையை கட்ட முடியாமல் திணறும் ராணி, தனது கணவருன் கூலி வேலைக்கு சென்று, அந்த கடன்களை அடைத்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க, அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, தங்களது வார்டுக்கு சரியாக வரவில்லை என்றும், இதன்காரணமாக, மக்களுக்கு சேவைகள் செய்ய முடியவில்லை என்றும், கலக்கத்துடன் ராணி கூறியுள்ளார். நம்பி வாக்கு செலுத்திய மக்களுக்கு, எதுவும் செய்ய முடியவில்லையே என்று சோகத்துடன் இருக்கும் ராணிக்கு, அவரது கணவர் தான் ஆறுதல் கூறி வருகிறார். ஒரு காலத்தில் நல்ல நிலையில் இருந்த இவர்கள், தேர்தலுக்கு பிறகு, மோசமான நிலைக்கு மாறியிருப்பது, அப்பகுதி மக்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

தேர்தலில் வெற்றியை சுவைத்த ஆறே மாதங்களில், பளபளப்பாக மாறும் அரசியல்வாதிகளுக்கு இடையே, வாழ்க்கையை தொலைத்த ராணிக்கு, திமுக கட்சியினரே எந்த உதவியும் செய்யவில்லை என்பது பரிதாபத்தின் உச்சம். எனவே, இவர்களின் நிலையை அறிந்து, கட்சி தலைமையே, கட்சி நிர்வாகிகளோ உதவி செய்வார்களா? என்ற ஏக்கத்துடன் விடைக் கொடுத்தார் கவுன்சிலர் ராணி

RELATED ARTICLES

Recent News