கண்ணாடி துகள்களை அகற்றாமல் கட்டுப்போட்ட மருத்துவர் – மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபரின் காலில் உள்ள கண்ணாடி துகள்களை முறையாக அகற்றாமல் கட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிபட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி (63) என்பவருக்கு கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பெரியசாமியின் காலில் உள்ள கண்ணாடி துகள்களை அகற்றாமல் அப்படியே வைத்து கட்டு கட்டியுள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் கதறியதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

அங்கு பெரியசாமியின் காலில் கட்டப்பட்ட கட்டுகளை அகற்றிய போது, காயப்பட்ட இடத்தில் கண்ணாடி துண்டுகள் இருந்ததை கண்டு பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.