அஸ்ஸாமை சேர்ந்த ரூபாலி பருவாவை பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக பாபா, கில்லி, உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்நிலையில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.