நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் விநாயகன், வர்மா என்ற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் முதலில் வர்மா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மம்முட்டியிடம் பேசப்பட்டதாகவும், சில காரணங்களால் மம்முட்டி நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விநாயகனை இயக்குநர் நெல்சன் அணுகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தில் ஏற்கனவே நடிகர் மோகன்லால் நடித்துள்ள நிலையில் மம்முட்டியும் இணைந்திருந்தால் படத்தின் கொண்டாட்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.