விஜய்யின் புதிய படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர் : யார் தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ‘பீஸ்ட்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. வசூலிலும் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, எனவே விஜய் ரசிகர்கள் கடும் வருத்தம் அடைந்தனர். தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் விஜய் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக்கை படக்குழு அணுகியுள்ளனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துள்ளார்.

நடிகர் கார்த்திக் சில மாதங்களுக்கு முன்பு மூட்டு வலியால் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜய் பட வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.