திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்கம் நிகழ்வில், மகளிர் அணிக்கான விளம்பர தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து விழாவில் கலந்துகொண்டு பேசிய கீர்த்தி சுரேஷ் கேரளாவின் தேசிய அணி வீராங்கனை மின்னு மணியையும் பாராட்டி கௌரவித்தார்.
மேலும் 2017-18 ஆம் ஆண்டில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய டி20 சாம்பியன்ஷிப்பை வென்றது குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார்.