சந்திப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மைக்கேல். புரியாத புதிர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இருவாக்கியுள்ள இப்படத்தில், திவ்யான்ஷா, வரலட்சுமி சரத்குமார், ஜிவிஎம் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ஹீரோவான சந்திப் கிஷன் தளபதி விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.