பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா. இதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறினார்.
நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் பெருமளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் எனும் ரசிகர், வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார். அதற்கான திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.

சம்ந்தா பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன் என அவருடைய ரசிகர் சந்தீப் கூறியுள்ளார்.