தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். நடிப்பது மட்டுமின்றி, கார் ரேஸிங்கிலும் ஆர்வம் கொண்ட இவர், துபாயில் நடைபெற்ற H24 கார் பந்தயத்தில் கலந்துக் கொண்டார்.
இந்த பந்தயத்தில் சிறப்பாக விளையாடிய அஜித்குமாரின் அணி, 3-வது இடத்தை பிடித்து, சாதனை படைத்தது. இந்நிலையில், கார் பந்தயத்தை முடித்துவிட்டு, திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் அஜித்தின் தலையில் கைவைத்து, அத்துமீறி நடந்துக் கொண்டுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த அஜித், ரசிகரின் கையை தள்ளிவிட்டார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.