வேஷ்டி சட்டையுடன் Mall உள்ளே சென்ற விவசாயி.. தடுத்து நிறுத்திய காவலாளி..

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்களில், அப்பகுதியின் பாரம்பரை உடைகள்,கௌர குறைவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த ஆடைகள் மட்டுமின்றி, அதனை அணிபவர்களும், மட்டமாகவே நடத்தப்படுகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில், கங்கம்மா திம்மையா என்ற மிகப்பெரிய Mall ஒன்று இயங்கி வருகிறது.

இந்த Mall-க்கு, வேட்டி சட்டை அணிந்த விவசாயி ஒருவர் சென்றுள்ளார். ஆனால், அவரது தோற்றத்தை காரணமாக கூறி, Mall-ன் காவலாளி, விவசாயியை உள்ளே விட மறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, விவசாயிகளின் தலைவர் என்று அழைக்கப்படும் குருபர் சாந்தகுமார், தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, Mall-ன் நிர்வாகம், விவசாயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார். அவ்வாறு மன்னிப்பு கேட்க தவறினால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News