லஞ்சம் வாங்கிய அரசு பெண் அதிகாரி! – சிக்கிய பின் அழுது புலம்பும் வீடியோ!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பழங்குடியினர் நலப்பொறியாளர் அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றுபவர் ஜெகத் ஜோதி. விடுதிக் கட்டிடம் கட்டுவதற்கும் அதற்கு ஆகும் செலவுகளின் பில்களை சமர்பிப்பதற்கும் ஒப்பந்ததாரரிடம் அவர் 84 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரர், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

அவர்கள் தந்த ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய 84 ஆயிரம் ரூபாயை, நிர்வாக பொறியாளர் ஜெகத் ஜோதியிடம் நேற்று வழங்கினார். அதை ஜெகத் ஜோதி வாங்கும் போது கையும், களவுமாக அவரை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் அவர் கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து ஜெகத் ஜோதியின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.65 லட்சம் ரொக்கம் மற்றும் 4 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. ‘இது ஒரு பொறியாளரிடம் இருந்து சமீபத்தில் மீட்கப்பட்ட பெரும் தொகை’ என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News