பீகாரில் கைமூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் வயதான ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிறகு அவர் தனது சைக்கிளை எடுக்க முயன்ற போது அங்கு வந்த பெண் காவலர்கள் சைக்கிளை வேகமாக எடுக்கும்படி கூறி அந்த முதியவரை லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வலியால் துடிக்கும் அந்த முதியவர் தன்னை அடிக்க வேண்டாம் என கதறுவதும் அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவர் ஸ்வாதி மாலிவால், பீகாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை ட்வீட்டில் குறிப்பிட்டு,”காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
कैसे ये पुलिसकर्मी एक बुज़ुर्ग को डंडे से बेरहमी से पीट रही हैं 😡
— Swati Maliwal (@SwatiJaiHind) January 21, 2023
बताया जा रहा है बाबा स्कूल में टीचर हैं और उनका क़सूर ये था कि इन मैडमों के सामने इनकी साइकिल गिर गई। @YadavTejashwi जी, कार्यवाही कीजिए pic.twitter.com/CxFrmVRuLJ