உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகர் எனும் கிராமத்தில் அபிஷேக் சர்மா என்பவருக்கும்ம், சுஷ்மா என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி மணமகன் உறவினர்களுடன் பெண்ணின் வீட்டிற்கு ஊர்வலமாக வந்துள்ளார்.மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் மாலைகளை மாற்றிக் கொண்டதும் அங்கு உணவு பரிமாறப்பட்டது.
பரிமாறப்பட்ட உணவுகளில் சைவ உணவு வகைகளாகவே இருந்துள்ளன. அசைவ உணவு எதுவும் இல்லாததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை முற்றி அடிதடி நடந்துள்ளது.
ஒருவரை ஒருவர் சரமாரியாகவும், கண்மூடித்தனமாகவும் தாக்க தொடங்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த நாற்காலிகளையும் தூக்கி வீசி அடித்துக்கொண்டனர். இதனால் கடைசி நேரத்தில் அந்த திருமணம் கைவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அபிஷேக் சர்மா, சுரேந்திர சர்மா, ராம்பிரவேஷ் சர்மா, ராஜ்குமார் மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.