Connect with us

Raj News Tamil

ஆவடி அருகே மின் கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து!

தமிழகம்

ஆவடி அருகே மின் கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து!

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இதன் எதிரொளியாக பெரும்பாலமான மக்கள் தங்கள் வீட்டில் உள்ள ஏசி பிரிட்ஜ் போன்ற குளிர்சாதன பெட்டி மின்விசிறி உள்ளிட்ட எந்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் சூழலில் குறைவான மின்னழுத்தம் ஏற்பட்டு டிரான்ஸ்பார்மர்கள் பற்றி எரியும் சூழல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் சேக்காடு பகுதியில் உள்ள 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் 16 மெகா வால்ட் ஆம்ப் திறன் கொண்ட உயரழுத்த ட்ரான்ஸ் பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு காரணமாக திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் திரவம் கலந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க கூடிய பணியில் ஈடுபட்டனர். எனினும் வானுயர கரும்புகள் சூழ்ந்து மல மலவென பற்றி எரிந்து தீயை அணைக்கும் பணி சவாலாக இருந்ததை அடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பூந்தமல்லி உள்ளிட்ட ஐந்து தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வான் உயர புகை எழுந்து குடியிருப்பு பகுதியில் சூழ்ந்ததால் அப்பகுதியில் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ விபத்துக்கான ஏராளமான குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக பட்டாபிராம், சேக்காடு, தண்டுரை, கோபால புரம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top