நீச்சல் குளத்தில் மூழ்கி ஐந்து வயது குழந்தை பலி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் உள்ள தனியார் ரிசாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் ஐந்து வயது ஆண் குழந்தை தவறி விழுந்து பலியானது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா-ஜமுனா தம்பதியினர் தோட்ட வேலை செய்து வந்துள்ளனர்.

வேலை செய்யும் வீட்டில் தங்கி வசித்து வந்த தம்பதியினரின் காமுன் என்கின்ற ஐந்து வயது ஆண் குழந்தை (அக்.10) நேற்று மாலை பெற்றோர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளான்.

திடீரென குழந்தையை காணவில்லை பெற்றோர்கள் இருவரும் தேடிய நிலையில் குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து இருந்ததை பார்த்த பெற்றோர்கள் கதறியபடி குழந்தையை மீட்டு பனையூரில் உள்ள தனியார் மரு்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதாக தெரிவித்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கானத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த பெற்றோர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து வேலை செய்து வந்த நிலையில் வேலை செய்த களைப்பில் பெற்றோர்கள் இருவரும் உறங்கிய நேரத்தில் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் ஐந்து வயது ஆண் குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News