“லிப்ட் கொடுங்க சார்” – உதவி செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டம் தென்னம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெர்னான்டர்ஸ். இவர், கடந்த வியாழக் கிழமை அன்று, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த நபர், லிப்ட் கொடுக்கும்படி, கேட்டுள்ளார்.

இதையடுத்து, அவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு, பெர்னான்டர்ஸ் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு, திடீரென வழிமறித்த இரண்டு பேர், பெர்னான்டர்ஸிடம் இருந்த பணம், செல்போன், பைக் ஆகியவற்றை பறித்துள்ளனர். அதன்பிறகே, பைக்கில் லிப்ட் கேட்டவர் விரித்த வலையில், தாம் சிக்கிக் கொண்டோம் என்பதை, பெர்னான்டர்ஸ் அறிந்துள்ளார்.

இதனை தடுப்பதற்கு எவ்வளவோ போராடியும், அவரால், தன்னுடைய உடமைகளை பாதுகாக்க முடியவில்லை. பின்னர், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிவக்குமார், சந்தோஷ் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை, தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News