28 நாள் குழந்தை பலி.. மன உளைச்சலில் மூத்த மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை..

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் லிஜி. இவருக்கு, 7 வயதில் பென் டோம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், லிஜிக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பு, குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு, லிஜி தாய் பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு போராடியும், குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை உயிரிழந்ததுபோல், இந்த குழந்தையும் உயிரிழந்ததால், லிஜி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதன்காரணமாக, தவறான முடிவை எடுத்த அவர், தனது மூத்த மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.