முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மகளிருக்கான உரிமைத் தொகை என்ற திட்டத்தின் அடிப்படையில், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.
ஆனால், இன்னும் சில பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு இருக்க, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இன்னும் 3 மாதங்களில், தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும், மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.