ஓட்டுநர் இல்லாமல் 70 கிலோ மீட்டர் தூரம் ஓடிய சரக்கு ரயில்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட சரக்கு ரயில் ஓட்டுநர் இல்லாமல் சுமார் 70 கிலோ மீட்டர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் சென்ற சரக்கு ரெயில் பஞ்சாபின் கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சியை அடைந்ததாக கூறப்படுகிறது. அங்கு சரக்கு ரெயில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முழுமையான விசாரணை அவசியம் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News