சாப்பாட்டில் ஊறுக்காய் வைக்காத ஹோட்டலுக்கு ரூ. 35,000 அபராதம்!

விழுப்புரத்தில் பார்சல் சாப்பாட்டிற்கு ஊறுகாய் கொடுக்காத பிரபல ஓட்டலுக்கு, நுகர்வோர் நீதிமன்றம் 35 ஆயிரத்து 25 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநலச் சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். இவரின் உறவினர் நேசம் என்பவர் 28.11.2021ம் தேதி இறந்துவிட்டார்.

இவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக முதியோர்களுக்கு அன்னதானம் 25 நபர்களுக்கு வழங்க வழங்க முடிவு செய்து 27.11.2022ம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் இயங்கும் ஹோட்டல் ( பாலமுருகன்) ஒன்றுக்கு சென்றார். அங்கு பார்சல் சாப்பாடு ரூ.80/- என்றும் கூறி, கொட்டேஷன் ரசீது கொடுத்துள்ளார்.

அக்கொட்டேஷனில் ஒரு பார்சல் சாப்பாட்டில் சாதம், சாம்பார், காரகுழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலை, கவர் மற்றும் ரூ 1 க்கு ஊறுகாய் பொட்டலம் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து 25 சாப்பாட்டுக்கும் ரூ.80/- வீதம் 2000 ரூபாய் பணம் பெற்றுகொண்டார்.

சாப்பாட்டு பொட்டலங்களை கொடுத்து உள்ளார். மேலும் விறசாப்பாட்டு பொட்டலங்களை பிரித்து சாப்பிடும் போது ஊறுகாய் இல்லாதது தெரியவந்தது.

இது குறித்து ஆரோக்கியசாமி ஹோட்டல் உரிமையாளரிடம் சென்று கேட்டு உள்ளார் அதற்கு ஊறுகாய்க்கு உரிய தொகையை தர மறுத்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி இது குறித்து விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார் தீர்ப்பு கூறினார்.

அத்தீர்ப்பில் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.30,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5,000 மற்றும் ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25/-ம் தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும் தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவிகிதம் வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News