சென்னை பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பொருத்தவரை கடந்த மூன்று மாதத்திற்கு முன்னதாகவே நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கட்டிடத்தின் உரிமையாளர் உமர் என்பவர் ஏற்கனவே மாநகராட்சி கொடுத்த கடிதத்தை பெற்றுக்கொண்டு மூன்று மாதத்திற்கு முன்பதாகவே காலி செய்து இருக்கிறார். மேலும் தற்போது பெய்த மழையின் காரணமாக திடீரென இன்று காலை 10 மணி அளவில் இந்த கட்டிடம் ஆனது இடிந்து விழுந்து இருக்கிறது.

பெரம்பூர் பாரக்ஸ் சாலையை பொருத்தவரை சற்று குறுகிய சாலை என்பதால் பொதுவாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.
உடனடியாக வேப்பேரி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்து வருகிறார்கள். மேலும் கட்