துணிவு படத்திற்கு பிறகு, அஜித்தின் அடுத்த படத்தை, விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தார். ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறினார்.
இதையடுத்து, பிரதீப் ரங்கநாதனை வைத்து, LIC என்ற படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில், இந்த திரைப்படமும், டிராப் ஆகிவிட்டதாக, தற்போது தகவல் ஒன்று பரவி வருகிறது.
இதற்கிடையே, இப்படம் டிராப் ஆகவில்லை என்றும், தற்போது சிறிய பிரேக் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இவ்வாறு இரண்டு தகவல்கள் பரவி வருவதால், எது உண்மை என்று தெரியாமல், ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.