கடந்த ஆண்டு டிசம்பரில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 182 இடங்களில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த நகை கடைக்காரர் ஒருவர், 18 காரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையை செய்துள்ளார்.
இந்த சிலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் இந்த தங்க சிலையை வாங்க ஆர்வமாக உள்ளனர். ராதிகா செயின்ஸ் நகை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பசந்த் போஹ்ரா இந்த சிலையை செய்துள்ளார்.
இந்த சிலையை செய்ய 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. து இப்போதைக்கு விற்பனைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.