ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாயா – அப்படியா..!

தக்காளியின் விலை 100 ரூபாயாக உச்சம் தொட்ட நேரத்தில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனையடுத்து, தக்காளியின் விலை குறைந்தது. இதேபோல் தற்போது வெங்காயத்தின் விலையும் உச்சம் தொட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, பஞ்சாப் அரசு, புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது, ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் ஆதார் அட்டையை காட்டினால் 25 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பஞ்சாப் மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காய்கறிகளின் விலை உயரும்போது இது போன்ற திட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு கொண்டு வந்தால் மக்கள் அதிகம் பயன் பெறுவார்கள்.

RELATED ARTICLES

Recent News